Tamil Fest 2022
Tamil Fest 2022
மாணவர்கள், தமிழர் மரபையும் பண்பாட்டையும் விழாக்கால உற்சாகத்தோடு அனுபவித்து, உணர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஆகஸ்டு மாதம் 06-ஆம் தேதி நடைபெற்ற 10-ஆவது தமிழ்த்திருவிழா நிகழ்வின் மூலம் உருவாக்கியது. மாணவர்களுக்கு ஆடுதல்,பாடுதல் இயல்பு எனினும் மரபில் தோய்ந்து தம்மை மறந்து ஆடிப் பாடிய வாய்ப்பினை தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்ள்ளி, தொடக்கக்கல்லூரிகளைச் சேர்ந்த 550 மாணவர்கள் ஒருங்கே பெற்றனர். உச்சாணிக் கொம்பில் நான்கு கரகச் செம்புகள் ஆடுவதும் பறையிசை ஒலிப்பதும் காட்சிக்கு விந்தை என்பதை இந்தியக் கலைஞர்களின் மரக்கால் ஆட்டம் மெய்ப்பித்தது. மரபை அறிவோம்! பண்பாட்டைக் காப்போம்! கலைகளைப் போற்றுவோம்!